செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/xwy-dbpn-cho இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் --> இது தேர்தல் நேரம். ஒரே இடத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், மாண்புமிகு மக்கள் சார்பாக அரசியல் கட்சிகளின் முன்பாக நாம் எழுப்பும் கேள்விகளும் அவர்களது பதில்களும் விரைவில் நமது இனைய தளத்தில் நீங்கள் காணலாம்..   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 322     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 322
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு
காவல் துறையின்  அத்துமீறல்களை யார் விசாரிப்பது? முடங்கிக் கிடக்கும் காவல் புகார் ஆணையங்கள்: RTI-இல் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!
காவல் துறை 📅 03 Apr 2026 ✍️ மாண்புமிகு மக்கள்

காவல் துறையின் அத்துமீறல்களை யார் விசாரிப்பது? முடங்கிக் கிடக்கும் காவல் புகார் ஆணையங்கள்: RTI-இல் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!

காவல் துறையின் அத்துமீறல்களை யார் விசாரிப்பது? முடங்கிக் கிடக்கும் காவல் புகார் ஆணையங்கள்: RTI-இல் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!

"வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் முறையிடுவது?" என்ற சாமானிய மக்களின் கேள்விக்கு விடையாக , உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் உருவாக்கப்பட்டதுதான் மாநில மற்றும் மாவட்ட அளவிலான காவல் புகார் ஆணையங்கள் (Police Complaint Authority) . ஆனால், தமிழகத்தில் இந்த ஆணையம் ஒரு 'காகிதப் புலியாக' கூடச் செயல்படவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் RTI ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் பேரில் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும்வரை சாத்தான்குளம், திருபுவனம் போன்ற நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இது தவிர வெளிவராத அத்துமீறல்கள் குறிப்பாக சமூக ஆர்வலர்கள் மீது புனையப்படும் பொய்வழக்குகள் எண்ணிலடங்காமால் உயர்ந்துகொண்டே செல்லும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் தமிழகத்தின் நிலையும்

2006-ஆம் ஆண்டு பிரகாஷ் சிங் VS இந்திய ஒன்றியம் வழக்கில், காவல்துறையின் அத்துமீறல்களை விசாரிக்கத் தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவல் புகார் ஆணையங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாநில அளவிலான ஆணையம்: SP மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ளவர்கள் மீதான புகார்களை விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைய வேண்டும்.

மாவட்ட அளவிலான ஆணையம்: DSP மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்கள் மீதான புகார்களை விசாரிக்க, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் அமைய வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட (Act 22 of 2013 - Tamilnadu Police (Reforms) Act என்ற சட்டங்கள் இந்தத் தீர்ப்பின் ஆன்மாவையே சிதைத்துவிட்டன. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிராக , தமிழகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்குப் பதிலாக, மாநில அளவில் உள்துறைச் செயலாளரும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்களும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாநில அளவில் DGP &ADGP , மாவட்ட அளவில் SP&ADSP உறுப்பினர்களாக இருந்து உதவி செய்வார்கள் என சட்டம் சொல்கிறது. . இது "குற்றம் சாட்டப்பட்ட துறையின் நிர்வாகிகளே நீதிபதிகளாகச் செயல்படுவது" போன்றது என விமர்சிக்கப்படுகிறது. மேலும், உச்ச நீதிமன்றம் வலியுறுத்திய பெண் உறுப்பினர் நியமனமும் தமிழகத்தில் கண்டுகொள்ளப்படவில்லை. இதனால் TN Police Reforms Act 2013, இயற்றப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இதுவரை அது செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால்தான் சாத்தன்குளமும், திருபுவனமும் அடிக்கடி நம் காதுகளில் ஒலித்த்துக்கொண்டுள்ளது.

RTI ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த RTI ஆர்வலர்கள், மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இந்த ஆணையத்தின் செயல்பாடு குறித்துத் தகவல்கள் கோரினர். அதில் கிடைத்த பதில்கள் அதிர்ச்சியளிக்கின்றன:

1. மாவட்ட காவல் புகார் ஆணையத்தின் செயல்பாடு குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டால், அவர்கள் அந்த மனுவைக் காவல் துறைக்கு அனுப்புகின்றனர். காவல் துறையோ, "இது ஆட்சியர் தலைமையிலான ஆணையம், அவரிடம்தான் கேட்க வேண்டும்" என மீண்டும் ஆட்சியருக்கே திருப்புகின்றனர். இந்த ஒருங்கிணைப்பு இல்லாமையே மாவட்ட காவல் ஆணையங்கள் செயல்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
.
2. பல மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில், இந்த காவல் புகார் ஆணையத்தின் கீழ் ஒரு புகார் கூட விசாரிக்கப்படவில்லை அல்லது பெறப்பட்ட புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தரவுகளே இல்லை என்ற பதில் வழங்கப்பட்டுள்ளது..

3. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இதுபோன்ற அமைப்பு மாவட்டத்தில் ஏற்படுத்தப்படவில்லை என எழுத்துபூர்வமாக தகவல் பெறும் உரிமைச்சட்ட மனுவிற்கு பதிலை அளித்துள்ளனர்.

4. உள்துறை செயலர் அலுவலகத்தில் இருந்து இதுவரை இரண்டு மாவட்டங்களில் இருந்துமட்டுமே, இந்த Police Complaint Authority அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

5. பொதுமக்களுக்கு இந்த ஆணையம் எங்கு இயங்குகிறது, யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்ற அடிப்படை விவரங்கள் கூட முறையாக விளம்பரப்படுத்தப்படவில்லை.

6. மாநில அளவில் அமைக்கப்படவேண்டிய State Security Commission , அதன் கூட்ட நடவடிக்கைகள், வருடாந்திர அறிக்கை ஆகியவைகள் குறித்து எந்த விதமான ஆவணங்களும் தமிழக உள்துறை செயலர் அலுவலகத்தில் இல்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

7. 38 மாவட்டங்களில் , 2 மாவட்டங்களில் மட்டுமே இந்த மாவட்ட புகார் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக உள்துறை செயலர் அலுவலகம் தகவலை வழங்கி உண்மையை ஒத்துக்கொண்டுள்ளது.

8. ஆக TN Police (Reforms) Act 2013 ஐ செயல்படுத்தாத மாவட்ட ஆட்சியர்களையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் எந்த சட்டத்தின் கீழ் தண்டிப்பது என்பதை அரசு விளக்கவேண்டும்.

RTI ஆர்வலர்களின் குற்றச்சாட்டு:

காவல்துறை அதிகாரிகள் மீதான புகாரை அதே துறையைச் சேர்ந்தவர்களோ அல்லது அரசு அதிகாரிகளோ விசாரிப்பது இயற்கை நீதிக்கு எதிரானது. ஆணையம் என்பது ஒரு சுதந்திரமான அமைப்பாக இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் இது 'துறைசார்ந்த பாதுகாப்புக் கவசமாக' மாற்றப்பட்டுள்ளது." இதனால், காவல் துறையினரின் அத்துமீறல்கள் வெளியுலகத்திற்கு வராமல் , குற்றம் செய்த காவலர்கள் உயர் காவல் அதிகாரிகளாலும், மாவட்ட நிர்வாகத்தாலும் காப்பாற்றப்படுகிறார்கள்.


இதற்கு தீர்வு என்ன?

தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தகுதியான ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு இந்த ஆணையங்களைச் சீரமைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்களும் காவல்துறையும் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்காமல், வெளிப்படையான விசாரணைக்கு வழிவகுக்க வேண்டும். இல்லையெனில், காவல்துறை அத்துமீறல்களுக்குப் பொதுமக்கள் ஒருபோதும் நீதி பெற முடியாது. ஒருபுறம் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாமல் திணறும் காவல்துறை, மறுபுறம் சட்டத்தை தவறாக பயன்படுத்தும் காவலர்களையும் காப்பாற்றி காவல்துறைக்கு களங்கம் விளைவித்து வருகிறது.

இதே உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில் டில்லி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள காவல் புகார் ஆணையத்தின் ஆண்டறிக்கையும் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. டில்லியிலும் , தமிழகத்திலும் காவல் துறையினரின் அத்துமீறல்கள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை மாண்புமிகு மக்களின் புரிதலுக்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

📄 இணைக்கப்பட்டுள்ள ஆவணம் (PDF/DOC)

🙌 இக்கதை உதவியதா? நண்பர்களிடம் பகிருங்கள்!

← அனைத்து கதைகளும்