செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
✅  இணைப்பு நகலெடுக்கப்பட்டது!  · 
📄 Public Documents

ஆவணங்கள்

அரசு ஆவணங்கள், RTI கோரிக்கைகள் மற்றும் முக்கியமான கோப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்

🔐 ஆவணம் சமர்ப்பிக்க உள்நுழையவும்
↳  துணை வகை  (SUB-CATEGORY)
மொத்தம் 1 ஆவணங்கள்
🔍

இந்த வகையில் எந்த ஆவணமும் இல்லை.

📄
தமிழகத்தில் சுமார் 3 கோடி செலவில் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியின் பயன்பாடு குறித்த முக்கியத்துவம்.
PDF கொள்கை முடிவுகள் / சுற்றறிக்கைகள் ↳ தகவல் தொழில்நுட்பத்துறை 🏷️ Important and Sensitive 📋 Cyber Security policy, E mail Policy and related circulars 🏛️ அனைத்து துறைகளும்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அரசு தகவல் தொடர்பு பாதுகாப்பாகவும் வெளிப்படையாகவும் இருப்பது மிகவும் அவசியம். தமிழ்நாடு அரசு, இதனை உணர்ந்து, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் tn.gov.in என்ற டொமைனில் சுமார் 3 கோடி செலவில் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கியுள்ளது. இது தமிழக அரசால் அரசுப்பணிகளில் (E Office - E Governance) செயலியை நடைமுறைப்படுத்துவதற்கான முதற்கட்ட அத்தியாவசியமான பணி. அரசு நடவடிக்கைகளில் நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இன்றியமையாதவை. அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதால், தகவல்களின் உண்மைத்தன்மை உறுதிப்படுகிறது. அரசு ஆவணங்கள் மற்றும் செய்திகள் சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. மேலும், வெளியாட்கள் அரசு பெயரில் போலியான தகவல்களை அனுப்புவதை தடுக்க முடியும். உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதி நிறுவனங்களும் இனி தீர்ப்பு நகல்களை அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனுப்ப திட்டமிட்டுள்ளன. தமிழ்நாடு அரசு 2024 ஆம் ஆண்டு சைபர் பாதுகாப்புக் கொள்கை 2.0 மற்றும் மின்னஞ்சல் கொள்கையை வெளியிட்டு, அனைத்து அரசு நிறுவனங்களும் tn.gov.in மின்னஞ்சலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி, TNeGA மூலம் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பதவி சார்ந்த மின்னஞ்சல் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், இன்றும் பல அரசு அலுவலர்கள் Gmail, Yahoo போன்ற தனியார் மின்னஞ்சல்களையே அலுவல் தொடர்புகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இது தேசிய தகவல் பாதுகாப்புக் கொள்கை வழிகாட்டுதல்களை (NISPG) மீறுவதாகக் கருதப்படுகிறது என மத்திய உளவுத்துறையும் சுட்டிக்காட்டியுள்ளது. அனைத்து அரசு அலுவலர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதுவே அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், தகவல் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் சரியான வழியாகும். இது தொடர்பான சுற்றறிக்கைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு மக்களே, எங்கெல்லாம் அரசு அலுவலகங்களில் தனியார் மின்னஞ்சல்களை காணும் பொழுது தங்களது எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்.
📅 06 May 2026 💾 4.5 MB
📤 உங்கள் பங்கு

ஆவணங்கள் சமர்ப்பிக்க உதவுங்கள்

முக்கியமான அரசு ஆவணங்களை மாண்பு மிகு மக்கள் இணையதளத்தில் சேர்க்க உங்கள் பங்களிப்பு தேவை. சமர்ப்பித்த ஆவணங்கள் ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்படும்.

📋
Government Orders
அரசு ஆணைகள்
G.O. Ms., G.O. Rt., இயக்குநர் சுற்றறிக்கைகள்
⚖️
RTI Documents
RTI ஆவணங்கள்
RTI கோரிக்கைகள் & பதில்கள், மேல்முறையீடுகள்
🏛️
Court Orders
நீதிமன்ற ஆணைகள்
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்
📜
Acts & Rules
சட்டங்கள் & விதிகள்
மத்திய, மாநில சட்டங்கள் மற்றும் விதிமுறைகள்
📊
Reports & Data
அறிக்கைகள்
தணிக்கை அறிக்கைகள், CAG, புள்ளிவிவரங்கள்
📢
Public Notices
பொது அறிவிப்புகள்
டெண்டர்கள், ஏலங்கள், அரசு திட்டங்கள்
🔐 பதிவு செய்து சமர்ப்பிக்க

சமர்ப்பிக்க தன்னார்வலராக பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கே உள்நுழையவும் (Login Here)

📄 ஆவண நூலகம் — மாண்புமிகு மக்கள் | 🔐 உள்நுழைந்து சமர்ப்பிக்க | அனைத்து ஆவணங்கள் →