செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 9:40 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்    •    ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 675   ✦  ✦  ✦  
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🖼️ Gallery / தொகுப்பு 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 675
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
📄
Home Department - POLICE
PDF காவல் நிலையங்களில் வீடியோ ↳ காவல் நிலையங்களில் வீடியோ 🏷️ Important 📋 ந.க. எண். 000252/குற்றம்4(2)/2019 🏛️ Home Department - POLICE
காவல் நிலையங்கள், வீடியோ எடுக்க தடை செய்யப்பட்ட இடங்கள் அல்ல. மாறாக பொது இடங்கள் ஆகும். எனவே வீடியோக்கள் எடுக்கலாம் எனவும். தீர்ப்பின் 10 மற்றும் 11 ஆவது பத்திகளில்... காவல் நிலையங்களுக்குள் காவல் நிலைய அதிகாரிகள் நடத்தும் விசாரணைகள் மற்றும் வாத, விவாதங்களை செல்போனில் வீடியோ எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் காவல் நிலையங்களில் உள்ள ஆவணங்கள் யாவும் நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 74 வது பிரிவுப்படி பொதுவான ஆவணங்கள் என்றும், அவற்றை இந்திய குடிமகன் எவர் ஒருவரும் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் மத்திய தகவல் ஆணையம், நியூ டெல்லி, வழக்கு எண்.CIC/DS/A/2013/001754/SA என்ற வழக்கின் தீர்ப்புரையில் உறுதி செய்துள்ளது. மனுதாரர் கோப்புகளை/ஆவணங்களை ஆய்வு செய்ய வரும் போது கூட ஒரு நபரை அனுமதிக்க வேண்டும். என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது : 2 (CIC/SG/AN/2009/000601/3306) . மனுதாரர் கோப்புகளை பார்வையிட தேவையான உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் செய்திட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. (:CIC/WB/C/2006/00174 DATE: 10.04.2006). மனுதாரர் கள ஆய்வு செய்ய வரும் போது வீடியோ எடுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது (CIC/WB/A/2006/00144). மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலக பொது தகவல் அலுவலர், அலுவலக கடித ந.க.எண்/ த.அ.உ.ச.கூகா. (த.இ)/2024 நாள்: 07.2024. இன் படி கிழக்கு காவல் நிலையத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 2(J) இன் படி கள ஆய்விற்கு அனுமதி வழங்குதல் தொடர்பாக... கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு கள ஆய்வு செய்ய தங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 1)கள ஆய்வின் போது தாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 கீழ் கோரியுள்ள தாங்கள் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் சம்பந்தமான கோப்புகளை மட்டுமே கள ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 2)தாங்களுக்கு தொடர்பில்லாத ஆவணங்களை கள ஆய்வு செய்ய தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 3)கோப்புகளின் பாதுகாப்பு கருதி தங்களுடன் ஒரு காவலர் இருப்பார். 4)கள ஆய்வின் போது தாங்கள் தொடர்புடைய ஆவணங்களை மட்டுமே கள ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 5)தங்களுக்கு தொடர்பில்லாத மூன்றாம் நபர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை கள ஆய்வு செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. 6)கோப்புகளை பார்வையிடும் போது பணியிலிருக்கும் காவலர்களிடம் எந்தவித வாக்குவாதத்திலோ அல்லது விவாதத்திலோ ஈடுபடகூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 7) மேலும் மனுதாரர் விண்ணப்பத்தில் ஆய்வின்போது உடன் ஒரு நபரை வைத்து கொள்ள மற்றும் அனுமதி கோரியிருந்தார். உடன் ஒரு நபரை அழைத்து வர மற்றும் களஆய்வு செய்யும் போது வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க த.அ.உ.ச 2005ல் எந்தவித சட்ட நடைமுறைகளும் இல்லை. என்று கூறி ....!!! கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 2 (j) இன் கீழ் கள ஆய்விற்கு அனுமதி அளித்திருப்பது (பணியில் வெளிப்படை தன்மை குறித்தோ மற்றும் அவர்கள் பொறுப்புடைமை குறித்தோ மற்றும் ஊழலை ஒழிப்பது குறித்தோ அல்லாமல்)" தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நீர்த்து போகச் செய்யவும்... காவல் நிலையங்களில் தகவல் கோரும் RTI ஆர்வலர்களுக்கு மறைமுகமாக கொடுக்கும் மிரட்டலே ஒழிய வேறென்னவாக இருக்க முடியும். காவல் நிலையங்களில் வீடியோ எடுக்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் வழக்கு எண் Cr WP No 3894/2022, Dated 28.11.2022. இன்படி தீர்ப்பு வழங்கியுள்ளது
📅 22 Oct 2026
💾 98.9 KB
← அனைத்து ஆவணங்களையும் பார்க்க
✅ இணைப்பு நகலெடுக்கப்பட்டது!