செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/xwy-dbpn-cho இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் --> இது தேர்தல் நேரம். ஒரே இடத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், மாண்புமிகு மக்கள் சார்பாக அரசியல் கட்சிகளின் முன்பாக நாம் எழுப்பும் கேள்விகளும் அவர்களது பதில்களும் விரைவில் நமது இனைய தளத்தில் நீங்கள் காணலாம்..   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 322     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 322
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு
சட்டத்தை மதிக்க வேண்டிய காவல்துறை ,  சட்டத்தை மிதிக்கிறது....
காவல்துறை .. 📅 31 Mar 2026 ✍️ மாண்புமிகுமக்கள்

சட்டத்தை மதிக்க வேண்டிய காவல்துறை , சட்டத்தை மிதிக்கிறது....

சட்டத்தை மதிக்க வேண்டிய காவல்துறை , சட்டத்தை மிதிக்கிறது....

தமிழக DGPயின் உத்தரவை மதிக்காத DIG,SP,DSP மற்றும் காவல்நிலையங்கள்..தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு கிடைத்த பதில் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது..

அரசால் அங்கீகரிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என தமிழக காவல் துறை தலைவர் DGP அவர்கள் , 3.6.2016 அன்றே C.No. D-X/4063/BCRB /2016 என்ற கடிதத்தின் வாயிலாக அனைத்து IG, DIG, SP, DSP, மற்றும் காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசின் ரகசிய தரவுகள் கசிவதை தடுக்கும் பொருட்டும், நேர்மையான , பொறுப்புணர்வுடன் கூடிய ஒரு காவல் துறையின் செயல்பாட்டை உறுதிசெயயும்பொருட்டு பிறப்பித்த இந்த உத்தரவு பத்து வருடங்கள் கழித்தும் கீழ்மட்ட காவல் அதிகாரிகளால் கடைபிடிக்கப்படுவது இல்லை. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதோ திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் பயன்பாட்டில் உள்ள தனியார் மின்னஞ்சல் முகவரிகள். இவையனைத்தும் பொதுமக்களின் பார்வையில் படாதபடி அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்த தனியார் மின்னஞ்சல்களை பயன்படுத்துவதன்மூலம் இந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து காவல் நிலையங்களும் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

📄 இணைக்கப்பட்டுள்ள ஆவணம் (PDF/DOC)

🙌 இக்கதை உதவியதா? நண்பர்களிடம் பகிருங்கள்!

← அனைத்து கதைகளும்