செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
Back to Feedbacks
S
Suggestion

பொது தகவல் அலுவலர் செயல்பாடு தொடர்பான கேள்வி

1. RTI-யின் கீழ் கோரப்பட்ட தகவல் தவறாக நிராகரிக்கப்பட்டாலோ, உண்மைக்குப் புறம்பான காரணங்களைக் கூறி தகவல் வழங்க மறுக்கப்பட்டாலோ, அதுகுறித்து யாரிடம் மற்றும் RTI சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் புகார் அல்லது மேல்முறையீடு செய்யலாம்?

2. பொது தகவல் அலுவலர் (PIO) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிமுறைகள் குறித்து போதுமான அறிவு அல்லது பயிற்சி இல்லாத காரணத்தால் தவறான பதில் அளித்தால், அதுகுறித்து யாரிடம் புகார் அளிக்கலாம்? மேலும், அந்த அலுவலருக்கு உரிய பயிற்சி வழங்கக் கோரி RTI சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் நடவடிக்கை கோரலாம்?
1 Replies

Replies (1)

b
bsmuthu123 OFFICIAL 07 Jul 2026, 07:31 AM
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் நிராகரிக்கப்பட்டாலோ, தவறான தகவல் வழங்கப்பட்டாலோ , பிரிவு 19(1)ன் கீழ் உங்கள் முதல் மேல்முறையீட்டை முதல் மேல்முறையீட்டு அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம். இது தவிர பிரிவு 18(1)ன் கீழ் , பொது தகவல் அலுவலரின் மீது பிரிவு 20(1)&20(2)ன் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி பிரிவு 18(1)ன் கீழ் உங்கள் புகார் மனுவை தகவல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கலாம்.

போதிய பயிற்சி மற்றும் பொது அறிவு இல்லாத பொது தகவல் அலுவலர்களுக்கு பிரிவு 26(1)(d)ன் படி பயிற்சி அளிக்க பரிந்துரை செய்யக்கோரி தகவல் ஆணையத்திடம் நமது புகாரை சமர்ப்பிக்கலாம்.

You must login to reply.