தகவல் ஆணையத்தின் விசாரணையின் பொழுது முடிந்த அளவு தங்களது வாதத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்து , ஆணையரிடம் உங்களது எழுத்து பூர்வ வாதத்தை பெற்றுக்கொண்டதாக பதிவு செய்ய வலியுறுத்துங்கள் . இறுதியில், உங்களது எழுத்து பூர்வமான வாதத்தின் அடிப்படையில் ஒரு Speaking Order ஐ தீர்ப்பாக வழங்கும்படி வலியுறுத்துங்கள். இதற்கான மாதிரிபடிவம் நமது இணைய தளத்தில் உள்ளது. ஆணையர் சட்டப்படி தீர்ப்பு வழங்கவில்லையெனில், உயர்நீதிமன்றத்தை நாடலாம். ஏற்கனவே, ஏராளமான நபர்கள் இதுபோன்று உயர்நீதிமன்றத்தை நாடி முற்றாக்கம் செய்யப்பட்ட தீர்ப்புக்களை மீண்டும் விசாரணை செய்து உரிய தீர்ப்புகளை பெற்றுள்ளனர். இது கொஞ்சம் சிரமம்தான். வேறு வழியில்லை. இன்று நியாயத்தை பெறுவதற்குக்கூட காலவிரயத்தையும் பொருள் விரயத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில்தான் உள்ளோம். இதுதான் யதார்த்தம்.