➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் • ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி
—> 617
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அரசு தகவல் தொடர்பு பாதுகாப்பாகவும் வெளிப்படையாகவும் இருப்பது மிகவும் அவசியம். தமிழ்நாடு அரசு, இதனை உணர்ந்து, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் tn.gov.in என்ற டொமைனில் சுமார் 3 கோடி செலவில் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கியுள்ளது.
இது தமிழக அரசால் அரசுப்பணிகளில் (E Office - E Governance) செயலியை நடைமுறைப்படுத்துவதற்கான முதற்கட்ட அத்தியாவசியமான பணி.
அரசு நடவடிக்கைகளில் நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இன்றியமையாதவை. அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதால், தகவல்களின் உண்மைத்தன்மை உறுதிப்படுகிறது. அரசு ஆவணங்கள் மற்றும் செய்திகள் சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. மேலும், வெளியாட்கள் அரசு பெயரில் போலியான தகவல்களை அனுப்புவதை தடுக்க முடியும். உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதி நிறுவனங்களும் இனி தீர்ப்பு நகல்களை அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனுப்ப திட்டமிட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு 2024 ஆம் ஆண்டு சைபர் பாதுகாப்புக் கொள்கை 2.0 மற்றும் மின்னஞ்சல் கொள்கையை வெளியிட்டு, அனைத்து அரசு நிறுவனங்களும் tn.gov.in மின்னஞ்சலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி, TNeGA மூலம் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பதவி சார்ந்த மின்னஞ்சல் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், இன்றும் பல அரசு அலுவலர்கள் Gmail, Yahoo போன்ற தனியார் மின்னஞ்சல்களையே அலுவல் தொடர்புகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இது தேசிய தகவல் பாதுகாப்புக் கொள்கை வழிகாட்டுதல்களை (NISPG) மீறுவதாகக் கருதப்படுகிறது என மத்திய உளவுத்துறையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அனைத்து அரசு அலுவலர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதுவே அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், தகவல் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் சரியான வழியாகும். இது தொடர்பான சுற்றறிக்கைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு மக்களே, எங்கெல்லாம் அரசு அலுவலகங்களில் தனியார் மின்னஞ்சல்களை காணும் பொழுது தங்களது எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்.
ஒவ்வொரு பொது அதிகார அமைப்பும் பிரிவு 4(1)(b)ன் கீழ் தாமாக முன்வந்து சீரிய இடைவெளியில் தகவல்களை வெளியிடவேண்டும். அப்படி வெளியிடப்பட்ட தகவல் எப்பொழுது புதுப்பிக்கப்பட்டது என்பதை அவர்களது இணையதளத்தில் வலதுபக்கம் மேலே குறிப்பிடப்படவேண்டும். கொள்முதல் குறித்தான டெண்டர் ,ஒப்பந்த ஆணைகள் வெளியிடப்படவேண்டும். பணியாளர்களின் மாறுதல்கள் வெளியிடப்படவேண்டும். ஒவ்வொரு பொது அதிகார அமைப்பிலும் தாமாக முன்வந்து வெளியிடப்படவேண்டிய தகவல்களை கண்காணிக்க ஒரு Nodal Officer நியமிக்கப்படவேண்டும். தாமாக முன்வந்து வெளியிடவேண்டிய தகவல்கள் முறையாக வெளியிடப்படுகிறதா என்பதை ஒவ்வொரு வருடமும் ஒரு மூன்றாம் தரப்பினர் ஆய்வு செய்து தகவல் ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். ஆய்வு செய்யும் அந்த மூன்றாம் தரப்பினரின் பெயர் பொது அதிகார மையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். பொது தகவல் அலுவலரால் பெறப்படும் ஒவ்வொரு மனுவும் அதற்கு அவர் வழங்கும் தகவல்களும் பொது ஆவணம் ; அவைகள் அவர்களது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். குடியரசர்களின் சாசனம் (Citizen charter) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடிமக்கள் சாசனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் எவ்வளவு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை வெளியிடவேண்டும். அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் குறித்தான அனைத்து தகவல்களும் வெளியிடப்படவேண்டும். ஒவ்வொரு பொது அதிகார அமைப்பும் தனது ஆண்டறிக்கையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்தும் , குறிப்பாக தமாகா முன்வந்து வெளியிடவேண்டிய தகவல்கள் குறித்தும் கட்டாயம் ஒரு அத்தியாயம் வெளியிடப்படவேண்டும்.
தகவல் பெறும் உரிமைச்சட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வசம் உள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து 2005 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட பல்வேறு சுற்றறிக்கைகள் இதில் பொருள் வாரியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் உள்ளபடி செயல்படுத்துவது ஒவ்வொரு பொது தகவல் அலுவலர் மற்றும் பொது அதிகார அமைப்பின் கடமையாகும்.
அரசு பணியில் சேர முடிவு செய்துவிட்டால், அவர் பொதுமக்களின் பார்வையில் உள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆக அவரது சொத்து விபரங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வழங்க தடையேதும் இல்லை அது தனிநபர் தகவலாக கருதப்படமாட்டாது.
தமிழகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த கிராமங்களில் தங்கி பணிபுரியவேண்டும். அதற்கான முகவரிகளை தலைமையிடத்து துணைவட்டாட்சியார் பதிவு செய்து பராமரிக்கவேண்டும். VAO மீதான புகார்களை விசாரிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனித்துவமான குறைகளைவு பிரிவு செயல்படவேண்டும்.
காவல் துறைக்கு கடிவாளம் போட அறிவுறுத்திய உச்சநீதிமன்றம் . ஆனால், காவல்துறை சீர்திருத்த சட்டம் 2013 என்ற பெயரில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் இன்றுவரை முழுமையாக செயல்பாட்டிற்கு வராத ஒரு சட்டம். இதனால்தான் சாத்தான் குளமும், திருப்புவனமும் மீண்டும் மீண்டும் ஊடகங்களில் வந்துகொண்டுள்ளது
காவல் நிலைய அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான சுயாதீனமான விசாரணை அமைப்பு (Police Complaint Authority) ஓய்வு பெற்ற நீதிபதிகளின் தலைமையில் அமைக்கப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு இன்றுவரை செயல்படுத்தவில்லை..
காவல் நிலையங்களில் வீடியோ எடுப்பது குற்றமல்ல என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆக காவல் நிலையங்களில் நமது பாதுகாப்பு கருதி நமது செயல்பாடுகளை வீடியோ எடுப்பது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட செயல் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
Contact Directory of Tamilnadu Government Offices 2025
PDF
புத்தகம்
↳ பொது துறை
🏷️ Telephone Directory of TN Offices
📋 Contact Directory released by Public Diepartment at Secretariat - 2025
🏛️ பொது துறை
இந்த ஆவணணத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான எண்கள் வேலை செய்வதில்லை. எனவே, திருத்தப்பட்ட பதிப்பில் ஒவ்வொரு அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரியும் இணைக்கவேண்டும் என்றும், வேலை செய்யாத தொலைபேசி எண்கள் இந்த ஆவணத்தில் இருந்து நீக்கப்படவேண்டும் என்றும் மாண்புமிகு மக்கள் சார்பாக ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.